ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக சிக்கல்கள் எங்களுக்கு வெற்றியை தருகிறது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக சிக்கல்கள் எங்களுக்கு வெற்றியை தருகிறது

பொது கூட்டணி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எவ்வித முரண்பாடும் இல்லை, புரிந்துணர்வு ஒப்பந்தம் முரண்பாடுகள் இன்றி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கூட்டணிக்குள் சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளை சுமுகமான கலந்துரையாடல்கள் மூலம் நிவர்த்தி செய்து கொண்டோம் என முன்னாள் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்,

அவர் மேலும் கூறியதாவது, பொதுத் தேர்தல் தொடர்பில் எங்களுக்கு எவ்வித சவாலும் இல்லை ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக சிக்கல்களே அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறதே தவிர எங்களுக்கு வெற்றியையே தருகிறது.

தொடர்ந்தும் சின்னம் தொடர்பிலும் கட்சி தலைமை தொடர்பிலும் முரண்பட்டு கொண்டிருந்தால் எங்களுக்கு பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad