புத்தளத்தில் ஹெரோயின், ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

புத்தளத்தில் ஹெரோயின், ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

புத்தளம் தம்பபண்ணி கடற்படை விஷேடப் பிரிவினர் மற்றும் புத்தளம் பொலிஸார் இனைந்து இன்று (05) காலை சந்தேகத்திற்கிடமான வீடொன்றை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடிபடுத்தப்பட்டபோது குறித்த வீட்டிலிருந்து ஹெரோயின், ஐஸ் போதைப் பொருளுடன் மூவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்பின் போது 6 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் மற்றும் போதைப் பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad