பாறுக் ஷிஹான்
சட்டவிரோதமாக உரப்பை மூலம் கடல் மண் கடத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றினை கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்கள உத்தியோகத்தர்கள் கைப்பற்றியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக அண்மைக்காலமாக மண் கடத்தல் இடம்பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து இரவு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்கள உத்தியோகத்தர் குழு சுற்றிவளைப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இரவு மோட்டார் சைக்கிள் மூலம் சட்டவிரோதமாக மண் கடத்தல் முயற்சி ஒன்றினை தடுத்து நிறுத்தியதுடன் கடத்தலை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதுடன் சுமார் 20க்கும் அதிகமான மண் மூடைகள் கைப்பற்றப்பட்டு மீண்டும் கடற்கரையில் கொட்டப்பட்டன.
மேலும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் தப்பிச் சென்ற சந்தேக நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment