பொருள் கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் குழுமி இருக்க வேண்டாம் - News View

Breaking

Post Top Ad

Friday, March 13, 2020

பொருள் கொள்வனவு செய்யும் போது பொதுமக்கள் குழுமி இருக்க வேண்டாம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் சன நடமாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அதாவது, வர்த்தக நிலையங்களில் பொருள் கொள்வனவு செய்யும் போது குழுமி இருப்பதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஏனெனில், ஐவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து எதிர்வரும் நாட்களில் நிலைமை பாரதூரமடையலாம் என்ற கோணத்தில் பொதுமக்கள் நேற்றைய தினம் பொது வர்த்தக சந்தைகளில் முண்டியடித்துக் கொண்டு பொருள் கொள்வனவில் ஈடுபட்டு அதிகளவில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வமாக இருந்தனர். 

இந்நிலையில், அங்கு மக்கள் கூட்டம் அதிகளவு இருந்துள்ளது. எனவே இவ்வாறு வர்த்தக நிலையங்களில் பொருள் கொள்வனவு செய்யும் போது குழுமி இருப்பதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad