அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படாது - சுகாதார அமைச்சு, பாதுகாப்பு பிரிவு தகவல்களை மட்டும் நம்புங்கள் - News View

Breaking

Post Top Ad

Friday, March 13, 2020

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படாது - சுகாதார அமைச்சு, பாதுகாப்பு பிரிவு தகவல்களை மட்டும் நம்புங்கள்

நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படாது எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, அதனால் அளவுக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். 

எமது நாட்டினுள் தற்போது பரவியுள்ள வைரஸ் கொரோனா தொற்று நோயின் நிமித்தம் மக்கள் பயமடைந்து பெருமளவில் வியாபார நிலையங்களில் உணவு பொருட்களை சேமிப்பதில் ஈடுபட்டு வருவதாக எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது. 

வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை எதிர்வரும் காலங்களில் நிலவ விருப்பதாக போலியான வதந்திகளை பரப்பியமையினால் பெரும்பாலான பொதுமக்கள் வியாபார நிலையங்களுக்கு சென்று உணவு பொருட்களை மொத்தமாக பெற்று தங்களது வீடுகளில் சேகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை காணமுடிகின்றது. ஆகையால் அப்படியான பற்றாக்குறை நிலைமை எமது நாட்டினுள் நிலவ வில்லை அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. 

சமூக வலயங்களின் மூலம் வெளியிடப்படும் தவறான வதந்திகளை நம்பி பொதுமக்களாகிய நீங்கள் ஏமாந்து போகாதீர்கள் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கை பணிகளில் பாதுகாப்பு படையினர் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்பு படையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வமான தகவல்களை மட்டும் பொதுமக்களாகிய நீங்கள் நம்பி பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad