மூடப்பட்டது தாஜ்மஹால்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

மூடப்பட்டது தாஜ்மஹால்!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காதல் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக நாளாந்தம் பல்லாயிரக் கணக்கானோர் வருவதாக தெரிவித்துள்ள இந்திய கலாசார அமைச்சகம், அதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தாஜ்மஹாலை தற்காலிகமாக மூடுவது அவசியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக நாளொன்றுக்கு சுமார் 70,000 பேர் வரை அங்கு செல்கின்றனர். 

இந்தியாவில் இதுவரை 114 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் மூவர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று தொடர்பான சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர். 

இதேவேளை இந்திய அரசாங்கம் மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பல முக்கிய தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்கள் என்பவற்றையும் மூடியுள்ளது.

No comments:

Post a Comment