(நா.தனுஜா)
இலங்கை முதலீட்டுச் சபையுடனான உடன்படிக்கையின் கீழ் ஏற்றுமதிப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் கம்பனிகளுக்கு அவசியமான ஏற்றுமதி செயற்பாட்டு வசதிகள் ஒழுங்கு செய்யப்படும் என்று அச்சபை அறிவித்திருக்கிறது.
இது குறித்து இலங்கை முதலீட்டுச் சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிப்பதாவது கட்டுநாயக்க போன்ற சுதந்திர வர்த்தக வலயங்களில் இலங்கை முதலீட்டுச் சபையுடனான உடன்படிக்கையின் கீழ் ஏற்றுமதிப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் கம்பனிகளுக்கு அவசியமான ஏற்றுமதி செயற்பாட்டு வசதிகள் ஒழுங்கு செய்யப்படும்.
இத்தகைய ஏற்றுமதிப் பொருட்களைப் பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் ஒருகொடவத்தையிலுள்ள முதலீட்டுச் சபையின் தளத்தில் முன்னெடுக்கப்படும்.
ஏற்றுமதிகள் தொடர்பில் தற்போது பின்பற்றப்படும் முதலீட்டுச் சபை நடைமுறைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை செல்லுபடியாகும் என்பதுடன் புதிய நடைமுறைகள் எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment