தற்போதைய நெருக்கடியான நிலையில் ஒரு சில கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியதுள்ளது : செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

தற்போதைய நெருக்கடியான நிலையில் ஒரு சில கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியதுள்ளது : செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்) 

ஊடரங்கு சட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான நிலையில் ஒரு சில தீர்மானங்கள் கடுமையான அளவில் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. சொந்த பிரதேசங்களுக்கு சென்றுள்ளவர்கள் மீண்டும் தொழில் புரியும் பிரதேசங்களுக்கு வருவதற்கான விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 

எவ்வித முன்னறிவித்தல் இன்றிய நிலையில் அரசாங்கம் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளமை வருத்தத்திற்குரியது. இவ்வாறான நிலைமை யுத்த காலத்தில் கூட ஏற்படவில்லை. பிரதேசங்களை முடக்கி பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவே தீர்மானித்திருந்தோம். 

ஆனால் இறுதியில் ஜனாதிபதி செயலணியின் தீர்மானத்திற்கு அமைய முழு நாட்டுக்கும் இரண்டு நாள் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

ஊரடங்கு சட்டம் திடீரென அறிவிக்கப்பட்டதை தொடர்ந்த பொதுமக்கள் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்திக் கொள்வதில் பாரிய நெருக்கடிகளுக்கும் சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள். 

அரசாங்கத்தின் நிலைமையினையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இத்தாலி நாட்டின் நிலைமை எமது நாட்டிலும் ஏற்படக் கூடாது என்பதற்காக கடுமையான தீர்மானங்களை முன்னெடுப்போம். 

கொரானா வைரஸ் தாக்கம் தற்போது நாட்டில் பகுதியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலைமையினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிடின் பாரிய விளைவுகள் ஏறபடும். 

ஊரடங்கு சட்டம் பிறப்பித்ததுடன் தொழில் செய்யும் பிரதேசங்களில் இருந்து தங்களின் சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தொழில் புரியும் பிரதேசங்களுக்கு வருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment