பாடசாலை விடுமுறை காலங்களில் வீட்டிலிருக்கும் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அனைத்து ஊடக பிரதானிகளிடமும் கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாடசாலை விடுமுறை காலங்களில் வீட்டிலிருக்கும் சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சிறார்களுக்கு உதவ தலையிடுமாறு கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும அனைத்து ஊடகங்களிடம் பிரதானிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலர் பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைகழக மாணவர்கள் வரையான அனைவரும் தற்போது கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டு வீடுகளில் உள்ளனர். எனவே மாணவர்களின் கல்விக்கான நேரங்களும் காலங்களும் வீணடிக்கப்படுவதனை தடுப்பது ஊடக நிறுவனங்களுக்குள்ள பிரதான பொறுப்பாகும்.
இந்நிலையில் தற்போது பல்வேறு ஊடகங்களில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனை நான் பாராட்டுகின்றேன்.
அத்துடன் தேசிய கல்வி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட கல்வி சார் நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் ஈ- தக்சலாவ கல்விக் கூடம் என்ற கல்வி நிகழ்ச்சிகள் ஊடக நிறுவனங்களின் ஊடாக நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களின் வசம் சேர்ப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
எனவே நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையை சரியாக புரிந்துணர்ந்து சிறார் வீட்டிலிருக்கும் நேர காலத்தை சரியான முறையில் பிரயோகிக்க பெற்றோர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment