(இராஜதுறை ஹஷான்)
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளவர்களில் அடையாளப்படுத்தப்பட்டவர்களை அவர்களின் வீடுகளின் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு பொலிஸாரை ஈடுபடுத்தவும், ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளருக்கு விசேட ஆலோசனை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதமர், இராணுவத் தளபதி, பாதுகாப்பு செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர், சுகாதார அமைச்சர், விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் தொழிந்துறை வல்லுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இதன் போதே ஜனாதிபதி தனது தீர்மானங்களை அறிவித்தார்.
இதன் பின்னர் பல்வேறு தரப்பினரது கருத்துக்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.
சுகாதார அமைச்சர் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டுள்ளது. ஆனால் அன்றாடம் கூலி தொழில் செய்து வாழும் நடுத்தர மக்கள் ஒருபுறம் பாதிக்கப்படுகின்றார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்குவது அவசியம்.
ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவமாறு தொடர்புடைய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். அரச அதிகாரிகள் கடமைகளை சரிவர செய்வது அவசியமாகும்.
பாதுகாப்பு செயலாளர் மார்ச் மாதம் 1ம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை தென்கொரியா, இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து 3000 பேர் நாட்டுக்குள் வந்துள்ளார்கள். இவர்களில் 1500 பேர் இதுவரையில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலுக்கு அமைய அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவ்வாறு வந்தவர்கள் தொடர்பில் அறிவிக்க பொதுமக்கள் மத்தியில் 119 என்ற தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்தோம். இதுவரையில் சுமார் 400 ற்கும் அதிகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஜனாதிபதி அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமல்ல அந்த 3000 பேர் தொடர்பிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும். அடையாளப்படுத்தப்பட்டவர்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துங்கள். பாதுகாப்புக்கு ஒரு பொலிஸாரை ஈடுபடுத்துங்கள். அத்துடன் கடமையில் ஈடுபடும் போது அரச அதிகாரிகளும் பொறுப்புடனும், பொறுமையாகவும் செயற்படுங்கள்.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் சில வைத்தியசாலைகளில் பற்றாகுறைகள் சேவை வழங்குதலை அடிப்படையாக்க கொண்டு எழுந்துள்ள நாடு தழுவிய ரீதியில் சிகிச்சை நடவடிக்கைளை முன்னெக்க சுகாதார பரிசோதகர்கள் போதாத நிலை காணப்படுகின்றன.
ஜனாதிபதி இதுவரையில் சுகாதார பரிசோதனை சேவையினை பூர்த்தி செய்துள்ளவர்களை உடன் சேவையில் இணைத்துக் கொள்ளுங்கள். எந்நிலையிலும் சுகாதார சேவையில் தட்டுப்பாடு நிலவக் கூடாது.
வைத்தியர் தென்கொரியா, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் பலர் புத்தளம் பிரதேசத்தில் அதிகளவில் உள்ளார்கள். தற்போது அடையாளப்படுத்தப்பட்ட ஒரு சில பிரதேசங்களை முடக்குவது தொடர்பில் கவனம் செலுத்த முடியுமா,
மேல் மாகாண ஆளுநர் நகரங்களை முடக்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால் அது மாறுப்பட்ட பிரச்சினையினை ஏற்படுத்தும். பொதுமக்கள் தற்போது பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுயமாகவே தங்களை பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்படுவது அவசியமாகும். தேவையற்ற விதத்தில் ஒன்று கூடுவதை முதலில் தவிர்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அவரவருக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment