கொரோனா வைரசிற்கான மருந்திற்கு தனி ஒரு நாடு உரிமை கோரக்கூடாது அந்த மருந்து தனியொரு நாட்டின் ஏகபோக உரிமைக்குரியதாக மாறாக்கூடாது என ஜி-7 அமைப்பின் உலக தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
வீடியோ மூலமான உச்சி மாநாட்டின் போது அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் நிறுவனமொன்று உருவாக்கி வரும் மருந்தினை தனது நாட்டிற்குரியதாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என ஜேர்மனியின் அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையிலேயே ஜி-7 தலைவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் குறித்த விபரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் ஒருங்கிணைந்த விதத்தில் செயற்பட வேண்டும் என ஜி-7 நாடுகளின் தலைவர்கள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சுகாதார பொருளாதார ஆபத்துகளிற்கு தீர்வை காண உறுதிபூணுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்து விடயத்தில் தனித்து செயற்படுவதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லெஸ் மைக்கல் குற்றம் சாட்டியுள்ளார். மருந்துகளை உருவாக்குவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment