ஒரு கிலோ கிராம் பருப்புக்கான விலை 65 ரூபா எனவும், தகரத்தில் அடைக்கப்பட்ட மீனின் விலை 100 ரூபா எனவும் உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் தொடர்பில் சற்று முன்னர் (17) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இதனை அறிவித்தார்.
இது தொடர்பான மேலும் சலுகைகள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்தவும், அவர்களின் நுகர்வின் அளவை உறுதிப்படுத்தவும் தாம் முன்மொழிவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
அதற்கமைய, போதியளவு அரிசி விநியோகம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காத வகையில், அவசியமான பொதுச் சேவைகள், வங்கி, நிதி பரிவர்த்தனைகள், போக்குவரத்து ஆகியவற்றை குறைந்தபட்ச எண்ணிக்கையிலானோரைப் பயன்படுத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment