கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக லெபனானில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைவாக சுகாதார நிலைமை பாதுகாப்பு தொடர்பாக கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு லெபனானில் உள்ள அனைத்து இலங்கையர்களிடமும் தூதரக அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
வைரஸ் தாக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பட்சத்தில் அல்லது அதற்கான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு செல்வதற்கும், வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை லெபனானில் உள்ள இலங்கையர் குறித்து அறிவிப்பதற்கும் ஆலோசனைகள் வழங்குவதற்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பணியாளர்கள் பலர் லெபனானில் தொழில் செய்து வருகின்றனர். லெபனானில் இதுவரையில் 13 பேர் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஓமான், ஐக்கிய அரபு எமரேட், கட்டார், குவைத், பஹ்ரேன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையர்கள் பெருமளவில் உள்ள யப்பான், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment