விமானப் படையினரால் கட்டுநாயக்க விமான நிலையம் சுத்திகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

விமானப் படையினரால் கட்டுநாயக்க விமான நிலையம் சுத்திகரிப்பு

நாடளாவிய ரீதியில் பரவி வரும் கொரோன வைரஸ் (கொவிட் 19) இலங்கையினுள் பரவுவதை தடுக்கும் பொருட்டு இதுவரையில் 1875 விமான பயணிகள் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையினுள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள 14 நாடுகளில் இருந்து கடந்த 10 ஆம் திகதி முதல் இன்று வரையில் வருகை தந்தவர்களே இவ்வாறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகளவில் பயணிகள் பயன்படுத்தும் பகுதிகளில் வைரஸ்களை அழிக்கும் முகமாக எல்கஹோல் தெளிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளிச் செல்லும். உட்புகும் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளையும் சுத்திகரிப்பு செய்யும் பணிகளில் இலங்கை விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில். வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கடும் சோதனைகளின் பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் உட்புகும் பகுதி, வெளியேறும் பகுதி, வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பகுதி, சுங்க வளாகங்கள், குடிவரவு, சுங்க வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இலங்கை விமானப் படையினர் சுத்திகரிப்பு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad