மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு : பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் எழுத்து மூல சமர்ப்பணம் முன்வைப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு : பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் எழுத்து மூல சமர்ப்பணம் முன்வைப்பு

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இன்று எழுத்து மூல சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் எழுத்து மூல சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் சார்பில் நாளைய தினம் மன்றில் எழுத்து மூல சமர்ப்பணம் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு தொடர்பான கட்டளை எதிர்வரும் 10 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad