அரச நியமனம் கிடைக்கப் பெற்று இடை நிறுத்தப்பட்ட, நியமனம் கிடைக்கப் பெறாத பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

அரச நியமனம் கிடைக்கப் பெற்று இடை நிறுத்தப்பட்ட, நியமனம் கிடைக்கப் பெறாத பட்டதாரிகளுடன் கலந்துரையாடல்

வட மாகாண பட்டதாரிகள் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தினால் அரச நியமனம் கிடைக்கப் பெற்று இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் அரச நியமனம் கிடைக்கப் பெறாத பட்டதாரிகளுக்கான தீர்மானம் மிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த கலந்துரையாடல் திர்வரும் 09.03.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

வட மாகாண பட்டதாரிகளின் அரச நியமனங்களில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில் அண்மையில் அரச நியமனம் கிடைக்கப் பெற்று இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் நியமனக் கடிதங்கள் கிடைக்கப் பெறாத பட்டதாரிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் தவறாது கலந்து கொள்ளுமாறு வட மாகாண பட்டதாரிகள் மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள வட மாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் 0777425286, செயலாளர் 0773301064, பொருளாளர் 0770763688 ஆகிய இலங்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad