வெந்நீருற்று கிணறு, பறவைகள் தீவு மூடப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

வெந்நீருற்று கிணறு, பறவைகள் தீவு மூடப்பட்டன

ஊள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் அரிய திலக இது தொடர்பாக தெரிவிக்கையில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி மூடப்படுவதாக கூறினார்.

இதேவேளை நிலாவெளியில் உள்ள பறவைகள் தீவும் இன்று முதல் 2 வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வன ஜீவராசிகள் உதவிப்பணிப்பாளர் கீர்த்தி சந்திர ரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad