கூட்டமைப்புக்கு ஆதரவான பொது ஊழியர் சங்கம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணாகதி - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

கூட்டமைப்புக்கு ஆதரவான பொது ஊழியர் சங்கம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணாகதி

பாறுக் ஷிஹான்

கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட பொது ஊழியர் சங்கமானது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு அமைச்சர் கே.எம்.  டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் அம்பாறை மாவட்டம் கல்முனை அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவினை வழங்க போவதாக ஊடகங்கள் முன்னிலையில் இணைந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மாகாணத்தில் பல போராட்டங்களை நடத்தி பாடுபட்டு வந்தவர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை மனிதனாக கூட மதிக்கவில்லை. 

இன்று தொடக்கம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவேன். தமிழ் தேசியம் கதைத்து எதை கண்டோம். நல்லாட்சியில் கூட ரணில் விக்கிரமசிங்க எங்களது தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. வடக்கு தமிழ் மக்களுக்கான ஒரே ஒரு தலைவர் தேவானந்தா மாத்திரமே அனைவரும் கட்சியை பலப்படுத்த வாருங்கள் என அறைகூவல் விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad