கொரோனா வைரஸினை எதிர்கொள்ள மிகச் சரியான நுட்பங்கள் அவசியம் - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

கொரோனா வைரஸினை எதிர்கொள்ள மிகச் சரியான நுட்பங்கள் அவசியம் - உலக சுகாதார ஸ்தாபனம்

(நா.தனுஜா) 

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு, நாம் மிகச் சரியான நுட்பங்களுடன் வைரஸை எதிர்த்துத் தாக்க வேண்டியது அவசியமாகும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்றோஸ் அதானொம் கேப்றியேயிஸ் தெரிவித்திருக்கிறார். 

இது குறித்து அவர் செய்திருக்கும் டுவிட்டர் பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, 

அனைவரையும் தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், நபர்களுக்கு இடையில் குறித்தளவான இடைவெளியைப் பேணுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகளாகும். ஆனால் அவை தற்காப்பு நடவடிக்கைகள் மாத்திரமே. 

ஒரு காற்பந்தாட்ட விளையாட்டில் பந்தைத் தடுப்பதன் ஊடாக மாத்திரம் வெற்றியீட்ட முடியாது. நீங்கள் செயற்திறனாக பந்தை உதைப்பதும் அவசியமாகும்.

அதேபோன்று இந்த கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு நாம் மிகச் சரியான நுட்பங்களுடன் வைரஸை எதிர்த்துத் தாக்க வேண்டியது அவசியமாகும்.

வைரஸ் தொற்றுக்கான அறிகுறி காணப்படும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று உறுதிப்படுப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் அதேவேளை அந்நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிய அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது முக்கியமானதாகும்.

No comments:

Post a Comment