பயணப் பொதிகளை கையாள்பவர்களுக்கு கொரோனா - நடுவானில் திருப்பப்பட்டது விமானம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

பயணப் பொதிகளை கையாள்பவர்களுக்கு கொரோனா - நடுவானில் திருப்பப்பட்டது விமானம்

பிரயாணிகளின் பயணப் பொதிகளை கையாள்பவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து சிட்னியிலிருந்து அடிலெய்டிற்கு சென்று கொண்டிருந்த குவாண்டாஸ் விமானம் நடுவானில் திருப்பப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அடிலெய்ட் விமான நிலையத்தில் பிரயாணிகளின் பயணப் பொதிகளை கையாளும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்தே குவாண்டாஸ் விமான சேவையின் விமானம் நடுவானில் திருப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அடிலெய்டில் குறிப்பிட்ட விமானத்தை சேவையில் ஈடுபடுத்த முடியாது என தெரிவித்துள்ளதுடன், பயணிகள் சிட்னி விமான நிலையத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. 

பிரிஸ்பேர்ன் மற்றும் மெல்பேர்ன் விமான நிலையங்களுக்கான சேவைகளும் இரத்தாகியுள்ளன. பிரயாணிகளின் பயணப் பொதிகளை கையாள்பவர்களுக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தை சேர்ந்த பணியாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட விமான நிலையத்தின் ஊடாக சென்ற பயணிகளை அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment