எ.எம்.றிசாத்
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலை பாரிய குறைபாடுகளுடன் காணப்படுகிறது.
இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் முறையாக கடமைக்கு வருவதில்லை அதேபோல் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுடன் முறையாக நடந்துகொள்வது இல்லை என்பதோடு. இங்கு பணியாற்றும் வைத்தியர்கள் காலையில் 8 மணி தொடக்கம் 9 மணி வரை தனியார் வைத்தியசாலையில் கடமைபுரிந்து வருவதோடு அங்கு வரும் நோயாளர்களுடன் காட்டும் அன்பும் அரவணைப்பும் இந்த அரச வைத்தியசாலைக்கு வரும் நோயர்களுடன் காட்டுவதில்லை என்பதோடு தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்து வருகின்றார்கள்.
அதேபோல் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை தனியார் வைத்தியசாலைக்கு வரும்படியும், இங்கு வழங்கும் OPD துண்டுகளை தனியார் பார்மசிகளில் மருந்து எடுப்பதற்கும். இரத்த பரிசோதனைகளை தனியார் வைத்தியசாலைகளில் மேட்கொள்ளுமாறும் இந்த வைத்தியர்கள் தூண்டிவருகின்றார்கள்.
மேலும் இந்த சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் 3 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் போதும் ஒரு வைத்தியர் மாத்திரம் கடமை நேரத்தில் பணியற்றுவதனால் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் கடும் சிரமத்தினை எதிர்கொள்கின்றார்கள்.
இரவு நேரங்களில் வரும் நோயாளர்களை வைத்தியர்கள் பார்வையிடுவதில்லை கடமையில் இருக்கும் தாதியர்கள் மூலம் கைத்தொலைபேசியில் உரையாடி அவர்களுக்கு மருந்து வழங்கும் நிலை இவ் வைத்தியசாலையில் காணப்படுகிறது.
மேலும் இவ்வைத்தியசாலைக்கு பொறுப்பாக இருக்கும் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் இவ்வாறான குறைபாடுகளுடன் இயங்கும் இந்த வைத்தியசாலை விடயத்தை பொருட்படுத்தாமல் அவர்களும் பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலை உருவாக்கத்திற்கும் தனியார் வைத்தியசாலை விரிவு படுத்தலுக்கும் தரகுப்பணம் பெற்று உதவி வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பாக பிரதேச மக்கள் உயர் அதிகாரிகளுக்கு பலமுறை தெரியப்படுத்திய போதும் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு இந்த விடயம் தொடர்பாக வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர், வட மாகாண ஆளுநர் மற்றும் மன்னார் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment