பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம்

(இராஜதுரை ஹஷான்)

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் கூட்டணியின் ஊடாகவே போட்டியிடும். பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினால் 120 ஆசனங்களை தனித்து பெற முடியும். 

கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியாத ஐக்கிய தேசிய கட்சியிடம் மக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள். 

வரலாற்று பின்னணியை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் இன்றைய நிலைமை கவலைக்குரியன. கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு அப்பாற் சென்று செயற்படும் போது இவ்வாறான நிலைமைகளே தோற்றம் பெறும் என்றும் கூறுனார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad