விமான நிலைய பார்வையாளருக்கான அனுமதி நாளை முதல் வழமைக்கு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

விமான நிலைய பார்வையாளருக்கான அனுமதி நாளை முதல் வழமைக்கு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டுப் பயணிகளுடன் உள்ளே செல்லும் போது பயணியோடு வேரொருவர் சேர்ந்து செல்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கல் முறை நாளை முதல் வழமைக்குத் திரும்பும் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு வெளிநாடுகளுக்குப் பயணிகள் செல்லும் போது அவர்களோடு பார்வையாளர்கள் செல்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்குவதற்கான தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பார்வையாளருக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பகுதி நாளை திறக்கப்பட்டு வழமை போல் செயற்படவுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனுமதிச் சீட்டுக்கள் வழங்கப்படுவதோடு, ஒருவருக்கான அனுமதிக் கட்டணம் 300 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad