இழுத்து மூடப்படுகின்றன பாடசாலைகள் - உலகின் 300 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, March 5, 2020

இழுத்து மூடப்படுகின்றன பாடசாலைகள் - உலகின் 300 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிப்பு

கொரோன வைரஸ் காரணமாக சர்வதேச ரீதியில் சுமார் 300 மில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது என யுனெஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

13 நாடுகள் பாடசாலைகளை மூடியுள்ளன என தெரிவித்துள்ள யுனெஸ்கோ நிறுவனம் 9 நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன இதன் காரணமாக 290.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

நெருக்கடி நிலையின் போது பாடசாலைகள் புதிய விடயமல்ல என்ற போதிலும் தற்போது முன்னொரு போதும் இல்லாத வேகத்தில் அளவிலும் பாடசாலைகள் மூடப்படுகின்றன என யுனெஸ்கோ நிறுவனத்தின் தலைவர் ஆட்ரி ஆசோலே தெரிவித்துள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் கல்வி கற்பதற்கான உரிமை பாதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோன வைரஸ் தொடர்ந்து பரவுவதன் காரணமாக இத்தாலி 15 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் விடுமுறையை அறிவித்துள்ளது.

தென்கொரியா பாடசாலைகளின் புதிய தவணை ஆரம்பத்தை பிற்போட்டுள்ளது.

ஜப்பானும் அனைத்து பாடசாலைகளையும் மூடியுள்ள அதேவேளை 92 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் ஈரானும் பாடசாலைகளை முற்றாக மூடியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad