பொதுத் தேர்தலை சட்டத்திற்கு மதிப்பளித்து அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் உண்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 3, 2020

பொதுத் தேர்தலை சட்டத்திற்கு மதிப்பளித்து அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் உண்டு

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை சட்டத்திற்கு மதிப்பளித்து அமைதியான முறையில் நடத்தும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் உண்டு. சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் சுயாதீனமான முறையில் சுதந்திரமாக செயற்படும் சூழலை தேர்தல் ஆணைக்குழு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். என கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வமான தீர்மானங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பிரதான அரசியல் கட்சிகள் இம்முறை கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன. கூட்டணி என்ற அடிப்படையில் ஒன்றினையும் போது மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறும். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் கெபே அமைப்பு அதிக கவனம் செலுத்தும்.

தேர்தல் சட்டத்திற்கு மதிப்பளித்து அமைதியான முறையில் பொதுத் தேர்தலை நடத்தும் பொறுப்பு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் உண்டு. தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த காலத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் இதர செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல்தல் சட்டத்திற்கு உட்பட்டதாக காணப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவுப் பெற்றதை தொடர்ந்து பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளன. இக்காலகட்டத்தில் ஏற்படும் முரண்பாடுகள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையாக மாற்றமடையும். ஆகவே தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தப்படும்.

நிறைவு பெற்ற தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் மீது மாறுப்பட்ட விதத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டன. இவ்விடயங்கள் குறித்தும் விசேட அவதானம் இம்முறை செலுத்தப்படும். ஊடகங்கள் சுயாதீனமான முறையில் சுதந்திரமாக தங்களின் சேவையினை முன்னெடுப்பதற்கான சூழலை தேர்தல் ஆணைக்குழு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment