கொரோனாவால் ஒரே நாளில் இத்தாலி 837, ஸ்பெயின் 553, பிரான்ஸ் 499, இங்கிலாந்து 381, அமெரிக்கா 360 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

கொரோனாவால் ஒரே நாளில் இத்தாலி 837, ஸ்பெயின் 553, பிரான்ஸ் 499, இங்கிலாந்து 381, அமெரிக்கா 360 பேர் பலி

கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஸ்பெயின் நாட்டில் 553 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிலும் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 837 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. 

மற்றுமொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 553 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 499 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 381 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 360 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment