41 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

41 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது. 

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலகம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 544 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 86 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 6 லட்சத்து 22 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 31 ஆயிரத்து 473 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பின்வருமாறு:-

இத்தாலி - 12,428
ஸ்பெயின் - 8,269
பிரான்ஸ் - 3,523
அமெரிக்கா - 3,501
சீனா - 3,305
இங்கிலாந்து - 1,789
சுவிஸ்சர்லாந்து - 1,039
ஈரான் - 2,898
ஜெர்மனி - 682
ஸ்வீடன் - 180
பிரேசில் - 168
தென்கொரியா - 162
போர்ச்சீகல் - 160
இந்தோனேசியா - 136
ஆஸ்திரியா - 128
கனடா - 95
டென்மார்க் - 90
பிலிப்பைன்ஸ் - 88
ருமெனியா - 80
ஈக்வடார் - 75
ஜப்பான் - 56
அயர்லாந்து - 54
ஈராக் - 50
டெமினிக்கன் குடியரசு - 51

No comments:

Post a Comment