ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 769 பேர் உயிரிழந்துள்ளதுடன், இறப்பு எண்ணிக்கை 4,858 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஸ்பெய்னில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,059 ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு முந்தைய நிலைமையுடன் ஒப்பிடும்போது 14% வீதம் அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களிடையே இறப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது, மருத்துவமனைகளில் உள்ள வயதானவர்கள் குறிப்பாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலிக்கு அடுத்தபடியாக ஐரோப்பாவில் இரண்டாவது மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெய்ன் உள்ளது.
ஸ்பெய்ன் அவசரகால நிலையை ஏப்ரல் 12 வரை நீடித்துள்ளது, மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது, பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஒரு ஸ்பானிஷ் நிறுவனம் மூலம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9,000 விரைவான நோயறிதல் சோதனை கருவிகள் குறைபாடுள்ளவை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த கருவிகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 559,432 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 25,045 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 128,706 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment