கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி 45 வைத்தியர்கள் இத்தாலியில் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இத்தாலியில் மருத்துவர் பாதுகாப்பு உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டு நிலை காரணமாகவே இந்த உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் பிலிப்போ அனெல்லி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை இத்தாலியில் 6000 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இத்தாலியில் இதுவரை 80,589 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 8,215 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment