வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இதுவரை 548 பேர் பதிவு - அறிவிக்க 119 உடன் மேலும் 5 தொலைபேசி இலக்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இதுவரை 548 பேர் பதிவு - அறிவிக்க 119 உடன் மேலும் 5 தொலைபேசி இலக்கங்கள்

இம்மாதம் 01 - 15 காலப் பகுதியில் ஐரோப்பா, ஈரான், தென் கொரியாவிலிருந்து வந்தவர்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, 548 பேர் இதுவரையில் பதிவு செய்திப்பதாக சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்று (17) கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை ஐரோப்பா, ஈரான், தென் கொரியாவிலிருந்து குறித்த காலப்பகுதியில் இலங்கை வந்தவர்களை பதிவு செய்வது மற்றும் அவர்களது விபரங்களை வழங்குவது தொடர்பில் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது குறித்த இலக்கத்திற்கு மேலதிகமாக 5 விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

தொலைபேசி இலக்கங்கள்:
011 2444480
011 2444481
011 5978720
011 5978730
011 5978734

மின்னஞ்சல் முகவரி :

No comments:

Post a Comment