வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாம் : அவசியமாயின் ஒருவர் மாத்திரம் செல்லவும், கொரியா, இத்தாலியிலிருந்து வந்த 400 பேர் தொடர்பில் எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாம் : அவசியமாயின் ஒருவர் மாத்திரம் செல்லவும், கொரியா, இத்தாலியிலிருந்து வந்த 400 பேர் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (16) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அநாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்துள்ள ட்விற்றர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருந்தாங்க கூட்டுத்தாபனத்தின் தலைவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளை ஜனாதிபதி தனது ட்விற்றர் கணக்கின் ஊடாக பகிர்ந்துள்ளார்.

வைத்திய நிபுணர் மேலும் தெரிவிக்கையில், "வெளிநாட்டிலிருந்து வந்து கந்தக்காட்டில் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து உண்மையில் 6 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட இருந்தது. ஆயினும் (ஹெந்தலை தொழு நோய் வைத்தியசாலைக்கு) மக்களின் எதிர்ப்பு காரணமாக, இத்தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை கந்தக்காட்டிற்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இக்காலப் பகுதியில் இத்தாலி மற்றும் கொரியாவிலிருந்து சுமார் 400 பேர் இலங்கை வந்துள்ளனர்.

எனவே, குறித்த நபர்களுள் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவர்கள் சமூகத்தில் ஒன்றித்திருக்க வாய்ப்பு காணப்படுவதால் வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று உங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் உணவுகளை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் ஒருவர் மாத்திரம் வெளியில் சென்று அதனை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லையெனில், பொது இடங்களுக்கு சென்றால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தினால் உங்களுக்கும் இந்நோய் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதால், அவ்வாய்ப்பை தடுப்பதற்கு நாம் உச்சபட்ச அளவில் செயற்பட வேண்டும் என்பதை ஞாபகமூட்டுவதாக, அரசாங்க மருந்தாங்க கூட்டுத்தாபனத்தின் தலைவர், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 18 பேர் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம். கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோயும் பாதுகாக்கவும்!
270 people are talking about this
Advise from eminent Consultant Surgeon Dr Prasanna Gunasena on how best to take precautions on the holiday declared today.

අද දින නිවාඩු දිනයක් ලෙස නම් කර තිබෙන අතර ඔබ සැලකිල්ලට ගත යුතු වැදගත් කරුණු කිහිපයක් වෛද්‍ය ප්‍රසන්න ගුනසේන මහතාගෙන්.
203 people are talking about this

No comments:

Post a Comment

Post Bottom Ad