அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டுங்கள் - ஜனாதிபதிக்கு ரணில் கடிதம் - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டுங்கள் - ஜனாதிபதிக்கு ரணில் கடிதம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் அதிகரித்துவரும் சமூக பொருளாதார பிரச்சினைகளை குறைக்கும் வகையிலுமான ஆரம்ப நடவடிக்கையாக அரசியல் கட்சிகளின் அனைத்துத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமொன்றை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸை உலக சுகாதார அமைப்பு தொற்று நோயாக பிரகடனம் செய்துள்ளது. இதன் மையம் சீனாவில் இருந்து ஐரோப்பாவுக்கு மாறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளதுடன் பல மத்திய கிழக்கு நாடுகள் வெளிநாட்டின் தமது நாடுகளுக்கு வருவதற்கு தடைவிதித்துள்ளனர். 

எதிர்வரும் நாட்களில் சிங்கள - தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர், ரமழான் ஆகிய பண்டிகைகளுடன் பொதுத் தேர்தலும் வரப்போகிறது. இக்காலத்தில் கொரோனா வைரஸ் பரவலும் இடம்பெறலாம். சமூகங்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், அரச மற்றும் பொதுத் துறை ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடும். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள அரசாங்கம் திட்டமொன்றை வகுத்திருப்பதாக கடந்த 2020 மார்ச் 14 ஆம் திகதிய டெய்லி நியூஸ் பத்திரிகையில் கூறப்பட்டிருந்து. மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் இந்த திட்டம் பற்றி பொதுமக்களுக்கு கூறப்படவேண்டும். 

மேற்படி திட்டம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் அதிகரித்துவரும் சமூக பொருளாதார பிரச்சினைகளை குறைக்கவும் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டும். இதன் முதற் கட்டமாக அரசியல் கட்சிகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள், முகாமைகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டமொன்றை கூட்டுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இதன்மூலம் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையொன்றை ஏற்படுத்தலாம் என்று அக்கடிதத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad