இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குறித்த 6 பேரும் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய நபர், இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர் ஆவார். ஏனைய நால்வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்கள் ஆவர்.

இதேவேளை ஶ்ரீலங்கன் விமான சேவை அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் இருந்தவர்களை சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் (16) 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றியதாக 28 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

16.03.2020
28. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்

27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

24. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்

23. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்

22. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்

21. 37 வயது ஆண்

20. 50 வயது ஆண்

19. 13 வயது சிறுமி

15.03.2020
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
ஆண்

17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
ஆண்

16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
ஆண்

15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
ஆண்

14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
ஆண்

13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
ஆண்

12. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
ஆண்

11. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர் 45 வயது ஆண்

14.03.2020
10. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்
17 வயது சிறுமி

9. இத்தாலியிலிருந்து வந்த பெண்
56 வயதான பெண்

8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
42 வயது ஆண்

7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
43 வயது ஆண்

6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
44 வயது ஆண்

13.03.2020
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
43 வயது ஆண்

4. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்
37 வயது ஆண்

3. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர்
41 வயது ஆண்

12.03.2020
2. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர்
44 வயது ஆண்

11.03.2020
1. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி

52 வயதான ஆண்

(இது தவிர கடந்த 27.01.2020 அன்று அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad