அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 25.5 மில்லியன் பேர் அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனா வைரசின் பிடியில் சிக்குவார்கள் என மாநில ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியுசொம்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொரோன வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கலிபோர்னியாவின் 40 மில்லியன் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் 19 உயிரிழந்துள்ளதுடன் 900 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.
இரண்டு மாத காலத்தில் கலிபோர்னியாவின் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அவர் எச்சரித்துள்ளார்.
எங்கள் சனத் தொகையில் 56 வீதமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து ஆளுநர் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment