இலங்கையிலிருந்து முகக் கவசங்களை ஏற்றுமதி செய்வது மற்றும் மீள் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சியினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் அடிப்படையில், மீள பயன்படுத்த முடியாத முகக் கவசங்கள் மற்றும் N95 வகை முகக் கவசங்களை ஏற்றுமதி செய்யவோ மீள் ஏற்றுமதி செய்யவோ முடியாது என, இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment