இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா - 24 மணி நேரத்தில் 601 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா - 24 மணி நேரத்தில் 601 பேர் பலி

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 601 பேர் உயிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக இத்தாலியை வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது. 

இத்தாலியில் 63 ஆயிரத்து 927 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 601 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே, கடந்த சனி (793 பேர்) மற்றும் ஞாயிறு (651 பேர்) ஆகிய இரண்டு நாட்களை ஒப்பிடும் போது நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பது சற்று ஆறுதல் தரக்கூடிய தகவலாகும். 

No comments:

Post a Comment