ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 16 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 2 லட்சத்து 54 ஆயிரத்து 906 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 373 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்துவருகிறது. 

குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வைரஸ் தாக்குதலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. 

இந்நிலையில், ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 

கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு

இத்தாலி - 6,077
சீனா - 3,270
ஸ்பெயின் - 2,207
ஜெர்மனி - 118
அமெரிக்கா - 504
ஈரான் - 1,812
பிரான்ஸ் - 860
தென்கொரியா - 111
சுவிஸ்சர்லாந்து - 118
இங்கிலாந்து - 335
நெதர்லாந்து - 213
பெல்ஜியம் - 88
ஜப்பான் - 41
பிரேசில் - 25
கிரீஸ் - 17
இந்தோனேசியா - 49
பிலிப்பைன்ஸ் - 33
ஈராக் - 23
ஸ்வீடன் - 25
பொர்ச்சீகல் - 23
ஆஸ்திரியா - 21 
சான் மரினோ - 20
அல்ஜிரியா - 17
துருக்கி - 30

No comments:

Post a Comment