ஈரான் பாராளுமன்றத்தில் 23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 4, 2020

ஈரான் பாராளுமன்றத்தில் 23 அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று

ஈரான் பாராளுமன்றத்தில் 8 சதவீதமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி ஈரான் பாராளுமன்றத்தில் 23 அமைச்சர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஈரானில் தற்போது மிக விரைவாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளுக்கான உதவிகளை வழங்க அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸால் தென்கொரியாவில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2336 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment