தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதல் இரு உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு 1000 பேர் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.
இதன் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. படையினரும் காவல்துறையினரும் ஜோகனஸ்பேர்க்கில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் நகரத்தில் வீடற்றவர்கள், அவர்கள் நியமிக்கப்பட்ட தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை இரவு ஒரு தொலைக்காட்சி உரையில், ஜனாதிபதி சிறில் ரமபோசா, தென்னாபிரிக்கா வியாழக்கிழமை நள்ளிரவு முதல் 21 நாட்கள் மூடப்படும் என்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment