(எம்.எப்.எம்.பஸீர்)
தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 18 ஆம் திகதி முற்பகல் வேளையில் வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு சென்றோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு ஹப்புத்தலை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பண்டாரவளையில் வைத்து கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து பெற்ற தகவலுக்கு அமைய குறித்த தொற்றாளர் கடந்த 18 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கும் முற்பகல் 11.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அன்றைய தினம் அந்த நேரத்தில் குறித்த வைத்தியசாலைக்கு சென்றவர்கள், 0715125854/ 0711170007 எனும் இலக்கங்கள் ஊடாக தமக்கு அறியத் தருமாரும், அது குறித்த ஆலோசனைகளையும், சுய தனிமைபப்டுத்தல் தொடர்பிலான ஆலோசனைகளையும் தாம் வழங்க தயாராக உள்ளதாகவும் ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்தது.
No comments:
Post a Comment