இந்நிலையில் தொழிலாளி ஒருவர் 179 மைல் தூரம் வீட்டிற்கு நடந்து செல்ல முயற்சித்த நிலையில், உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர்ந்த 40 வயதுடைய தொழிலாளி ஒருவரே தனது சொந்த ஊருக்கு நடந்து சென்ற கொண்டிருந்த வேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் இந்தியா தற்போது 21 நாட்கள் ஊடங்கு சட்டத்தை அமுல்ப்படுத்தியுள்ளது. இக்காலப்பகுதியில் பொது போக்குவரத்து இயங்குவதை நிறுத்தியுள்ளது, அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்குகின்றன.
இது, இந்தியாவில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றி ஆயிரக்கணக்கானோர் முக்கிய நகரங்களை விட்டு வெளியேறி வீட்டிற்கு செல்ல தூண்டியுள்ளது.
புதுடில்லியில் பணிபுரிந்த குறித்த நபர், தலைநகரில் இருந்து மத்திய இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அவ்வேளை அக்ராவில் (டெல்லியில் இருந்து 134 மைல்) கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு (டெல்லியில் இருந்து 179 மைல்) சென்று கொண்டிருந்தார் என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் கீழே விழுந்த நிலையில் நெடுஞ்சாலைக்கு அருகில் ஒரு கடைக்காரர் அவருக்கு தேநீர் மற்றும் சாப்பிட ஏதாவது கொடுத்துள்ளார். இருப்பினும், நெஞ்சு வலிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment