இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - இத்தாலி தூதரகம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - இத்தாலி தூதரகம்

(எம்.மனோசித்ரா) 

இத்தாலியில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது. 

இத்தாலியில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து இலங்கை பத்திரிகைகளில் வெளிவரும் சில செய்திகள் தொடர்பாக இத்தாலி தூதரகம் தெளிவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது இத்தாலியின் ஒரு சில பகுதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும் இத்தாலி மக்கள் நிர்வாணமாகவும் மத சடங்குகள் செய்யப்படாமலும் புதைக்கப்படுகின்றனர் என்று வெளியான செய்தி முற்றிலும் பொய்யானதாகும். 

இறுதி சடங்குகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள இடமளிக்கவில்லை என்பது உண்மையென்றாலும் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் உறவினர்கள் என மிகவும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானவர்களுடன் பாதிரியாரின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இறந்த ஒவ்வொரு உடலும் (ஒரு சவப் பெட்டியில் அல்லது ஒரு சில சமயங்களில் அவரது சாம்பல்) தனித்தனியாக அனைத்து மரியாதையுடனும் விரும்பிய மத சடங்குகளுடனும் மற்றும் சட்டங்களுக்கு அமையவும் இறந்தவருக்கு மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இது இத்தாலி கலாசாரத்தில் ஆழமாக வேறூன்றியுள்ள ஒரு வழக்கமாகும். 

அண்மைக்கால செய்தி வெளியீடுகளில் குறிப்பிடப்பட்ட இத்தாலியிலிருந்து திரும்பி வந்தவர்கள் இந்த தூதரகத்திலிருந்து விசாவினைப் பெற்றுக் கொள்ளவில்லை அல்லது கோரவில்லை என்பதை நாம் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம். 

அதேநேரம் இலங்கையிலுள்ளவர்கள் பலரும் எமக்களித்த ஆதரவுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment