கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இளவரசர் சார்ள்ஸ் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறி குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
71 வயதான இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்ள்ஸின் செய்தித் தொடர்பாளர் அப்போது தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இளவரசர் சார்ள்ஸ் 7 நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது மனைவி கமிலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத போதும் அவரும் சார்ள்ஸுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
அரசு மற்றும் மருத்துவ அறிவுறுத்தலின்படி, இருவரும் ஸ்கொட்லாந்திலுள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் இளவரசர் சார்ள்ஸைப் பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் நல்ல உடல் நிலையில் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதிலிருந்து வெளியே வந்தார் .
No comments:
Post a Comment