மார்ச் 17, 18, 19 அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு : தனியார் துறைக்கும் வழங்குமாறு கோரிக்கை - அத்தியாவசிய சேவைகள் விதிவிலக்கு - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

மார்ச் 17, 18, 19 அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு : தனியார் துறைக்கும் வழங்குமாறு கோரிக்கை - அத்தியாவசிய சேவைகள் விதிவிலக்கு

அரசாங்கம் மூன்று நாள் விசேட விடுமுறையை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தையும் கருத்திற்கொண்டு குறித்த முடிவை எடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, அத்தியாவசிய சேவைகள், வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம் ஆகியன தவிர்ந்த ஏனைய அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இவ்விசேட விடுமுறை, அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு (மார்ச் 17, 18, 19) விசேட அரசாங்க விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ் விடுமுறையை தனியார் துறையினருக்கும் வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பான அபாயத்தை கருத்தில்கொண்டு, இவ் விடுமுறையை மேலும் நீடிப்பதா அல்லது கைவிடுவதாக என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நேற்றைய தினம் (16) திங்கட்கிழமை அரசாங்க, வர்த்தக, வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad