சாதாரண முக கவசம் 50 ரூபா - N95 முக கவசம் 325 ரூபா - அதிக விலைக்கு விற்பனை செய்தால் அழையுங்கள் 1977 - News View

Breaking

Post Top Ad

Monday, March 16, 2020

சாதாரண முக கவசம் 50 ரூபா - N95 முக கவசம் 325 ரூபா - அதிக விலைக்கு விற்பனை செய்தால் அழையுங்கள் 1977

சுகாதார அமைச்சினால் மீண்டும் முகக் கவசங்களுக்கான உச்சபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மீள பயன்படுத்த முடியாத சாதாரண முக கவத்திற்கு ரூ. 50 எனவும், N95 வகை முகக் கவசத்திற்கு ரூ. 325 எனவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இன்று (16) இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 29ஆம் திகதி, சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலையிலும் பார்க்க இரு மடங்கிற்கும் அதிகமாக தற்போதைய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் ஒரு சில வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் சாதாரண முகக் கவசம் ரூ. 75 - ரூ. 100 வரை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம், மீள பயன்படுத்த முடியாத சாதாரண முக கவத்திற்கு ரூ. 15 எனவும், N95 வகை முகக் கவசத்திற்கு ரூ. 150 எனவும் உச்சபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அதிக விலைக்கு முக கவசங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் 1977 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad