ஒரே நாளில் உலகளவில் 1,600 மரணங்கள் : அச்சத்தை ஏற்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

ஒரே நாளில் உலகளவில் 1,600 மரணங்கள் : அச்சத்தை ஏற்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை

உலகையே அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று, உலகளவில் கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் நிகழ்ந்திருப்பதை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளிக்காட்டுகிறது. 

உலகில் ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை வெளியிடுகிறது உலக சுகாதார நிறுவனம். 

அவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த தொற்றுகள், மரணங்கள் மற்றும் முந்தைய 24 மணி நேரத்தில் நிகழ்ந்த தொற்றுகள், இறப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் இடம் பெற்றிருக்கும். 

மத்திய ஐரோப்பிய நேரப்படி மார்ச் 21 நள்ளிரவு 11.59 க்கு வெளியிடப்பட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, முந்தைய 24 மணி நேரத்தில் 26,069 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், இதே காலத்தில் 1,600 பேர் இந்த நோயால் இறந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் 1,600 பேர் மரணம் என்பது இந்த கொரோனா வைரஸ் சிக்கல் உலகில் தோன்றியதில் இருந்து இதுவரை இல்லாத புதிய அதிக எண்ணக்கையாகும். 

இதுவரை உலகில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற தகவல்களைப் பொறுத்தவரை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அளிக்கும் புள்ளிவிவரப்படி இன்று காலை வரை உலகில் 336,00 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 98,334 பேர் குணமடைந்துவிட்டனர். 14,641 பேர் இதுவரை இறந்துள்ளனர் என்பதுவும் மிக கவலையானதொரு விடயமாகும்.

No comments:

Post a Comment