எரிவாயுவை வீடுகளுக்கே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை - முகவர்களின் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

எரிவாயுவை வீடுகளுக்கே விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை - முகவர்களின் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம்

(இராஜதுரை ஹஷான்) 

பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் உள்ள 9000 லிட்ரோ எரிவாயு (கேஸ்) நிறுவன விநியோக மத்திய நிலையங்கள் ஊடாக வீடுகளுக்கு சமையல் எரிவாயுவை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து விநியோக மத்திய நிலையத்தின் ஊடாக இந்த சேவை முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் எவ்விதத்திலும் எரிவாயு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சமையல் எரிவாயுவை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிக்மி சேவையின் ஊடாகவும், வீடுகளுக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்கள் ஊடாகவும் மேலதிக தவகல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

மேல் மாகாண மற்றும் மத்திய மாகாணம்
குமார் ஜயவர்தன 0777775658 

தென் மாகாணம்
நதுன் 0763488452 

வடக்கு மாகாணம் 
ராஜ் குமார் 0770495501 

கிழக்கு மாகாணம்
சர்ஜூன் 0773705631

No comments:

Post a Comment