அக்பர் பிரதர்ஸிடமிருந்து 100 மில்லியன் ரூபா நிதி - ஜனாதிபதி சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 50 மில்லியன் ரூபா நிதி - உலர் உணவு பொதிகளும் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 31, 2020

அக்பர் பிரதர்ஸிடமிருந்து 100 மில்லியன் ரூபா நிதி - ஜனாதிபதி சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 50 மில்லியன் ரூபா நிதி - உலர் உணவு பொதிகளும் கையளிப்பு

COVID-19 க்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கையின் பிரபல தேயிலை ஏற்றுமதியாளர்களான அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் ரூபா 100 மில்லியன் நிதியை வழங்கியுள்ளனர்.

இந்த கடினமான நேரத்தில் அதன் ஊழியர்களுக்கும் ஏனைய மக்களுக்கும் உதவும் வகையில் பல நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்த நிதியை அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ரூபா 50 மில்லியனை அக்பர் பிரதர்ஸ் வழங்கியுள்ளனர்.

இலங்கை மக்களுக்கு சேவை செய்வதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், அந்நிறுவனம் சிலாபத்தில் புதிய சுகாதார மையமொன்றையும் நிர்மாணிப்பதில் தனது ஈடுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தவிர அதன் ஊழியர்களுக்கு, உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வேறு தேவைகள் உள்ளிட்ட பல அவசரகால பதில் ஏற்பாடுகளையும் அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கும் அருகிலுள்ள கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஆகிய தேவைகள் கொண்டவர்களுக்கு உலர் உணர்வுகள் உள்ளிட்ட நிவாரணப் பொதிகளையும் அது விநியோகித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக அதன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் ஒத்துழைப்பு குறித்து ஆழ்ந்த நன்றியுணர்வையும் பெருமையையும் தெரிவிப்பதாகவும், இந்த நாட்டின் பொறுப்பான நிறுவனம் எனும் வகையில் அதன் சமூக கடமைக்கு அது முழுமையாக உறுதியளித்துள்ளதாகவும் அக்பர் பிரதர்ஸ் பணிப்பாளர் குழு தெரிவித்துள்ளது.

தினகரன்

No comments:

Post a Comment