EPF மாதாந்த வைப்பீடு விபரம் SMS மூலம் அனுப்பும் நடைமுறை ஆரம்பம் - ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் எண்ணிக்கை 2.6 மில்லியன் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

EPF மாதாந்த வைப்பீடு விபரம் SMS மூலம் அனுப்பும் நடைமுறை ஆரம்பம் - ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் எண்ணிக்கை 2.6 மில்லியன்

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு தமது மாதாந்த பங்களிப்பு பணம் கணக்கில் சேர்க்கப்படுவது தொடர்பாக உடனடியாக அறியத்தரும் கையடக்க தொலைபேசி குறுஞ் செய்தி தகவல் சேவை நடைமுறைப்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஊழியர் சேமலாப நிதியத்தில் 2.6 மில்லியன் நிலையான அங்கத்தவர்கள் கொண்டுள்ளது.

தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகையானது, நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள 6 தொடக்கம் 12 மாத காலங்கள் செல்கின்றது.

இதன் காரணமாக தம்மால் பங்களிப்பு செய்யப்பட்ட நிதி கணக்கில் சேர்க்கப்படுவது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளை அங்கத்தவர்கள் அடிக்கடி எதிர்கொள்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனால் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில், குறித்த தொலை கணக்கில் சேர்க்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பில் அங்கத்தவர்களால் வழங்கப்படும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பரிந்துரைக்கே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment