எஸ்.எம்.எம்.முர்ஷித்
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியைப் பற்றி எவ்வளவு மோசமாக விமர்சித்தார்கள் ஆனால் அவர் அப்படிப்பட்டவர் அல்ல ஜனாதிபதி கேட்டாபாய ராஜபக்ஷ ஒரு நல்ல மனிதர் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியின் கல்குடா தொகுதி முக்கியஸ்தர் ஏ.முஸ்தபாவின் அழைப்பின் பேரில் ஓட்டமாவடி மீறாவோடை பிரதேசத்திற்கு வருகை தந்த சட்டத்தரணி மக்கள் சந்திப்பில் ஈடுபட்டதன் பின்னர் மீறாவோடை அந் நூர் கேட்பேர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லீம் அரசியல் தலைவர்கள் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால் நாடு மியன்மாராகிவிடும், பெண்களை கற்பழிப்பார்கள், எங்களது சொத்துக்களும் நிலங்களும் சூரையாடப்படும் என்றெல்லாம் தெரிவித்தனர். அது நடந்ததா முஸ்லீமாக இருந்து கொண்டு ஒருவருக்கு இல்லாத ஒன்றை பேச முடியுமா அவர்கள் சொன்னதற்கு மாற்றமாகத்தான் நடைபெறுகின்றது.
ஜனாதிபதி வந்த உடனயே முதல் சொன்ன வார்த்தை எந்த அரச திணைக்களங்களிலும் எனது புகைப்படத்தை வைக்க வேண்டாம் என்று சொன்னார். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இருந்த இரண்டாயிரம் பேரை இருநூறுராக குறைத்தார். வாகன பேரணியை இல்லாமல் செய்தார், ஆடம்பரத்தை விரும்பாத ஒர் ஜனாதிபதி என்றால் அது எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷதான்.
நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது முஸ்லீம் தலைவர்கள் நாங்கள் இஸ்லாத்தை அழிக்க வந்த பிர்அவ்னை ஆதரிப்பது போலவும் சஜித் பிரேமதாசாவை இஸ்லாமிய ஆட்சியாளர்களில் ஒருவரான உமர்கத்தாவைப் போன்றுதான் எமது சமுதாயம் பார்த்தது.
எமது சமுதாயத்த ஏமாற்றி ஏமாற்றி அரசியல்வாதிகள் காலங்காலமாக பதவிக்கு வருவாங்க அவர்களுக்கு தேவை என்றால் ஒரு கட்சியில் இருந்து மற்றக் கட்சிக்கும் மற்றக் கட்சியில் இருந்து இந்தக் கட்சிக்கும் போவார்கள் அவர்கள் எங்களது வாக்குகளை வைத்து வியாபாரம் செய்கின்றார்கள் இதனால் பெரும்பான்மை சமூகமும் முஸ்லீம் சமுகத்தை சந்தேகத்துடன் பார்க்கின்றார்கள்.
சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லாது போகுமானால் எமது சமுகமும் மிகவும் கஸ்டமான நிலைக்ககுத்தான் தல்லப்படுவோம் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் 1989 ஆம் ஆண்டு ரனசிங்க பிரேமதாசாவை ஆதரித்தார். 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரை ஆதரித்தார் ஏன் பெரும்பான்மை சமுகம் அவர்களை ஆதரித்ததனால் முஸ்லீம்களும் அந்த வெற்றியில் பங்காளிகளாக மாறிக்கொள்வோம் என்பதற்காக.
இப்போதைய தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் அரசியல் தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் இவர்களுக்கு அரசியல் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதிக வாங்கினை பெறுகின்றது பொதுஜன பெரமுன கட்சி அப்போது இவர்களுக்கு தெரியவில்லையா பெரும்பான்மை மக்கள் யாரை அதிகம் ஆதரிக்கின்றார்கள் என்று அஷ்ரப் விட்டுச் சென்ற காங்கிரஸை பல காங்கிரசாக மாற்றியது மற்றும்தான் இவர்கள் செய்த வேலை என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் முஹம்மட் உவைஸ் முஹம்மட், பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்களான முஸ்டீன் இஸ்மாயில், பிரதேச பாடசாலைகளினதும் அரபு கல்லூரியினதும் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை கௌரவித்து பொதுஜன பெரமுன கட்சியின் ஓட்டாமாவடி கிளை இளைஞர்களினால் கௌரவித்து அதற்கான நினைவுச் சின்னம் எம்.இஸ்ஸதினால் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment